சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ரீஸா ஹென்றிக்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் இத்தொடரில் அதிகரித்துள்ளன.
டி-20 சர்வதேச போட்டியில் 2000 ரன்கள்
இந்தப் போட்டியில் ஹென்ட்ரிக்ஸ் 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 2000 ரன்களை நிறைவு செய்வார். இதுவரை 68 போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹென்ரிக்ஸ் 29.87 சராசரியில் 1,942 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 அரை சதங்களும் அடங்கும். இந்த எண்ணிக்கையை எட்டிய மூன்றாவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன் குயின்டன் டி காக் (2,584 ரன்கள்), டேவிட் மில்லர் (2,396 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக வேகமாக 2000 ரன்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிவேகமாக டி20 கிரிக்கெட்டில் இரண்டாயிரம் ரன்களை குவித்த வீரராக குயின்டன் டி காக் தற்போது முதலிடத்தில் உள்ளார். அவர் 71 இன்னிங்ஸில் இரண்டாயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக் ஔள்ள நிலையில், இத்தொடரில் ரீஸா ஹென்றிக்ஸ் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள்
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் இத்தொடரில் ரிஸா ஹென்றிக்ஸ் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களையும் எட்டுவார். இதுவரை, தென் ஆப்பிரிக்காவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து வீரர்கள் மட்டுமே 50 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்துள்ளனர். இதில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், ஜேபி டுமினி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் ரீஸா ஹென்றிக்ஸும் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.