ஐபிஎல் 2021: மாற்று வீரர்கள் குறித்து விராட் கோலி ஓபன் டாக்!

Updated: Mon, Sep 13 2021 22:59 IST
Replacement players coming in have some great skillsets: Kohli (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் முதல் பாதி முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டு தற்போது வரும் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடரில் விளையாட சில வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி துபாய் வந்தடைந்துள்ளார். தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் அவர் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, மாற்று வீரர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “நான் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்தேன். நாங்கள் கடந்த மாதத்தில் யார் அணியில் இணைகிறார்கள், வெளியேறுகிறார்கள் என்பதை குறித்து ஆலோசனை நடத்தினோம்.

எங்களுடைய முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில், தரம் வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம். முக்கிய வீரர்களை தவற விடுகிறோம். அவர்கள் எங்கள் ஆர்சிபி குடும்பத்தின் ஒரு பகுதி. ஆனால், புதிதாக அணியில் இணைந்தவர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள். குறிப்பாக இங்குள்ள சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அவர்கள் மொத்த அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அதேபோல் முதல் பகுதியில் சிறப்பாக செயல்பட்டதை போன்று 2ஆவது பகுதியையும் சிறப்பாக தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை