சிஎஸ்கேவில் ஜடேஜா நீடிப்பது உறுதி; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Fri, Sep 23 2022 18:59 IST
Reports: CSK deny parting ways with Ravindra Jadeja (Image Source: Google)

சிஎஸ்கே நிர்வாகத்திடம் ஜடேஜா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஜடேஜா வேறு அணிக்கு விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஏலத்திற்கு முன்பே ஜடேஜா வேறு அணிக்கு டிரேட் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜடேஜாவுக்கு சூப்பர் கிங்ஸ் அணி கிடுக்கு பிடி ஒன்றை போட்டுள்ளது. இதன் மூலம் ஜடேஜாவால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது ஐபிஎல் மினி ஏலம் நடப்பாண்டு டிசம்பரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்பே ஜடேஜாவை சிஎஸ்கே அணி ட்ரேட் செய்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் இன்னொரு ஐபிஎல் அணி ஜடேஜாவை தங்கள் அணிக்கு அனுப்ப சிஎஸ்கே விடம் அணுகியது. இதற்கு சிஎஸ்கே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜடேஜாவை டிரேட் செய்யும் முடிவு இல்லை என்றும் சிஎஸ்கே திட்டவட்டமாக அறிவித்து.

இதன் மூலம் ஜடேஜா வேறு அணிக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஜடேஜாவின் சிஎஸ்கே ஒப்பந்தம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. டிரேடிங் முறைக்கு சிஎஸ்கே ஒற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஜடேஜா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிஎஸ்கேவில் தான் கண்டிப்பாக விளையாட வேண்டும்.

இல்லை எனில் தனக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி ஜடேஜா விளையாடாமல் போகலாம். அப்படி சென்றால் ஜடேஜாவுக்கு ஐபிஎல் மூலம் வழங்கப்படும் ஊதியம் கிடைக்காது. இது தவிர ஜடேஜா வேறு அணிக்கு செல்ல நடவடிக்கை எடுத்தால் இதையே காரணமாக காட்டி அவரை ஐபிஎல் போட்டியில் இருந்து தடை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

சிஎஸ்கேவின் இந்த பிடிவாதத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜடேஜா தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஜடேஜாவுக்கு முன் இருப்பது இரண்டே வழி தான். ஒன்று சிஎஸ்கே விடும் ஒன்றி செல்வது இல்லை ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டேன் என முடிவு எடுப்பது மட்டும்தான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை