இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு - தகவல்!

Updated: Sat, Sep 25 2021 20:27 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவந்தது. இதில் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிற்கு முன்னதாக இந்திய அணி பயிற்சியாளர், பிசியோ ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடரின் வெற்றியாளரும் அறிவிக்கப்படாமல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வகையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இப்போட்டி நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::