அஃபிஃபை கட்டி தழுவி மன்னிப்பு கோரிய அஃப்ரிடி!
தாக்காவில் நேற்று வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 7 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது.
109 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணி வீரர் ஆஃபிஃப் ஹுசேன் சிக்ஸர் அடித்தமைக்காக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அஃப்ரிடி பந்தை எறிந்தது சர்ச்சையாகியுள்ளது. 3ஆவது ஓவரை அஃப்ரிடி வீசினார், களத்தில் இருந்த ஹுசேன் 2ஆவது பந்தில் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்ரிடி 3ஆவது பந்தை ஷார் பந்தாக வீசினார். ஆனால், பந்தை பேக்ஃபுட்டில் டிபெண்ட் செய்தார் ஹுசேன். பந்தை ஃபீல்டிங் செய்த அஃப்ரிடி, க்ரீஸுக்குள் இருந்த ஹுசேன் மீது பந்தை வீசி எறிந்தார். ஆனால், கிரீஸை விட்டு வெளியே வந்தால்கூட ஸ்டெம்ப்பை நோக்கி எறியும் வகையில் பந்துவீச்சாளர் அச்சுறுத்தலாம்.
ஆனால், ஹுசேன் க்ரீஸுக்குள் நின்றிருந்தார். பந்தை ஃபீல்டிங் செய்த அஃப்ரிடி திடீரென பந்தை எடுத்து ஹுசேன் மீது எறிந்தார். இதைச் சற்றும் எதிர்பாராத ஹுசேன் திரும்பிக் கொண்டார். பந்து ஹுசேனின் கால் பகுதியில் பட்டு வலியால் துடித்து க்ரீஸில் சுருண்டு விழுந்துவிட்டார்.
ஹுசேன் வலியால் துடிப்பதைப் பார்த்த பின்புதான் அஃப்ரிடி தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரினார். அதன்பின் அணியின் மருத்துவர் குழு வந்து ஹுசேனுக்கு முதலுதவி அளித்து பேட்டிங் செய்ய வைத்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பின்பும் அஃபிஃப் ஹுசேனை சந்தித்த ஷாஹின் அஃப்ரிடி அவரை கட்டித்தழுவி மன்னிப்பு கோரினார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காணொளியாக தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Also Read: T20 World Cup 2021
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இக்காணொளி தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது.