Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!

Updated: Fri, Nov 29 2024 13:17 IST
Image Source: Google

பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் அதே பிளேயிங் லெவனுடன் செல்ல விரும்புகிறேன். நீங்கள் உங்கள் அணியின் சாம்பியன் வீரர்கள் மீது நம்பிக்கை காட்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு முறையும் பெரிய பெரிய தொடர்களில் தங்கள் திறனை நிரூபித்துள்ளனர். அதேசமயம் மார்னஸ் லபுஷாக்னே தனது ஃபார்மை மீட்டெடுக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் கடினமான விக்கெட்டில் உயர்தரமான பந்துவீச்சை எதிர்கொளவது எப்போது சவாலானது தான். 

 

ஆனால் அவர் அதனை மற்றியமைக்கவும், ரன்களை சேர்க்கவும் தனக்கான வழியை கண்டறிய வேண்டியது அவசியம். மேலும் அணியில் உள்ள மற்ற வீரர்களும் சவாலை சமாளித்து விளையாடும் யுக்தியை கண்டறிய வேண்டும். அதிலும் பும்ரா போன்ற ஒருவர் உங்களுக்கு ஏதேனும் வாய்ப்பளித்தால், நீங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் மிட்செல் மார்ஷ் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளர். 

Also Read: Funding To Save Test Cricket

ரிக்கி பாண்டிங் கணித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை