தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - இயன் சேப்பல்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது.
இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி , 1 தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்தை தேர்வு செய்ய வேண்டும் என இயன் சேப்பல் கூறியுள்ளாஎ.
இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், "டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் ஃபார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, “உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீக்குகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும்.
அதனால் தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல” என்று தெரிவிட்த்துள்ளார்.