சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பராக் - காணொளி!

Updated: Thu, Apr 10 2025 13:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனுமூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்க்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் விக்கெட்டை இழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி, இன்னிங்ஸின் 7ஆவது ஓவரை குல்வந்த் கெஜ்ரோலியா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடன் கேட்ச் கொடுத்து ரியான் பராக் தனது விக்கெட்டை இழந்தார். முதலில் கள நடுவர் இதற்கு அவுட் கொடுத்த நிலையில், ரியான் பாராக் மூன்றாம் நடுவரிடம் மேல்முறையீடு செய்தார்.

அதன்படி மறுபரிசீலனையில் பார்த்தபோது, ​​பந்து பேட்டிற்கு அருகில் இருந்தபோது, ​​பேட்டும் தரையுடன் சிறிது தொடர்பு கொண்டது தெளிவாகத் தெரிந்தது, ஆனால் இது நடப்பதற்கு சற்று முன்பு, ஸ்னிக்கோ மீட்டரில் சில அதிர்வுகள் காணப்பட்டது. இதன் விளைவாக, மூன்றாவது நடுவரும் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு சரி என்று கூறியதுடன், ரியான் பராக் ஆட்டமிழந்தாதாக அறிவித்தார். இதனால் ஏம்மற்றமடைந்த ரியான் பராக் நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனாலும் கள நடுவர்கள் தங்களின் முடிவில் எந்த மாற்றமுல் இல்லை என்று கூறியதுடன், ரியான் பராக்கை பெவிலியனுக்கும் செல்லும் படி கூறினர். இதனால் விரக்தியடைந்த ரியான் பராக் ஓய்வரையில் நுழையும் போது தனது பேட்டை தூக்கி எறிந்தார். ஏனெனில் அவர் ஆட்டமிழப்பதற்கு முன்னர் மூன்று அபாரமான சிக்ஸர்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருந்தார். இந்நிலையில் ரியான் பராக் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை