ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
15ஆவது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (8) மற்றும் தேவ்தட் படிக்கல் (7) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் வந்த அஸ்வின் 16 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 27 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய டார்ல் மிட்செல் (16), சிம்ரன் ஹெய்ட்மர் (3), டிரண்ட் பவுல்ட் (5) மற்றும் பிரசீத் கிருஷ்ணா (2) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ப்ராக், கடைசி ஓவர் வரை தாக்குபிடித்து, கடைசி ஓவரில் 18 ரன்களுடன் சேர்த்து மொத்தம் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹசரங்கா மற்றும் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.