தோனி கேப்டன்சி குறித்து உத்தப்பா ஓபன் டாக்!
சிஎஸ்கே அணியால் கடந்த ஆண்டு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பா சென்னை அணிக்காக இதுவரை விளையாடவில்லை என்றாலும் அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பவுல் அவுட் முறையில் பாகிஸ்தானை வீழ்த்திய சம்பவம் குறித்த நினைவுகளை அவரிடம் கேட்ட போது தனது நினைவலைகளை பகிர்ந்த ராபின் உத்தப்பா சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.
டர்பனில் நடைபெற்ற அந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 141 ரன்களை எடுக்க ஆட்டம் சாமானில் முடிந்து பவுல் அவுட் முறைக்கு சென்றது. இப்போது சூப்பர் ஓவர் இருப்பது போன்று அப்போது இருந்த அந்த பவுல் அவுட் முறையில் சேவாக் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் பந்துவீசி ஸ்டம்புகளைத் தகர்த்தனர்.
அதன் பிறகு மூன்றாவது ஆளாக யாருமே எதிர்பாராதவிதமாக முழுநேர பேட்ஸ்மேனான உத்தப்பா பந்து வீச வந்தார். மேலும் அவர் பந்து வீசி ஸ்டம்பையும் தகர்த்ததால் இந்திய அணி வெற்றியும் பெற்றது.
இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேசிய உத்தப்பா கூறுகையில், "ஆட்டம் சமனில் முடிந்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் பவுல் அவுட் முறை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் தோனியிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் என்று கூறினேன்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஒருகணம் என்னை பார்த்த அவர் கண்களை இமைக்காமல் அடுத்த நொடியே மறுப்பு ஏதும் சொல்லாமல் நிச்சயம் என்றார், அதுதான் அவருடைய கேப்டனாக முதல் சர்வதேச போட்டி அந்த போட்டியிலேயே அவர் இளம்வீரரான என்னை நம்பி அந்த வாய்ப்பினை அளித்தார். அவருடைய தலைமைப் பண்பை அந்த போட்டியில் நான் பார்த்தேன். நம்மால் என்ன முடியும் என்று நிச்சயம் நாம் சொன்னால் அவர் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.