டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!

Updated: Fri, Oct 07 2022 16:44 IST
Rohit Sharma and company lands in Australia, 1ST practice match vs Western Australia on Monday (Image Source: Google)

ஆஸ்திரேலியவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இத்தொடரில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12 மற்றும் நாக்-அவுட் என இந்தத் தொடர் நடைபெறுகிறது. 

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் உள்ளன. இந்தப் பிரிவில் முதல் சுற்றில் வென்று வரும் இரண்டு அணிகளும் இணைய உள்ளன.

வரும் 16ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் 23ஆம் தேதி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி முன்கூட்டியே அங்கு முகாமிட்டுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி. இந்நிலையில், இன்று இந்திய அணி பயிற்சியை தொடங்கி உள்ளது. இந்திய வீரர்கள் தற்போது மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான பெர்த் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த மைதானத்தில் வரும் 10 மற்றும் 13ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.

 

ரோஹித் சர்மா தலைமையில் தற்போது 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். பும்ராவுக்கு மாற்று வீரரை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. முன்னதாக, மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய அணி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை