டி20 உலகக்கோப்பை: ஹர்திக் நிச்சயம் பந்துவீசுவார் - ரோஹித் உறுதி!

Updated: Wed, Oct 20 2021 19:37 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தினால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது, 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஹார்திக் பாண்டியா பந்துவீசுவது குறித்து பேசிய ரோஹித் சர்மா "இந்திய அணிக்கு 6-வது பந்துவீச்சாளர் தேவை. ஹார்திக் பாண்டியா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால், அவர் பந்துவீச சற்று நேரம் எடுக்கும். அவர் இன்னும் பந்துவீச தொடங்கவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு தயாராகிவிட வேண்டும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களிடம் தரம் உள்ளது. 6ஆவது பந்துவீச்சாளர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பேட்டிங் வரிசையிலும் கூடுதலாக சிலவற்றை உறுதி செய்ய வேண்டும். அவை அனைத்தையும் இன்று பரிசோதிக்கவுள்ளோம்" என்றார் என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::