ஐபிஎல் 2022: தொடர்ச்சியாக நான்கு தோல்விகள்; ரோஹித் சர்மா கருத்து!

Updated: Sun, Apr 10 2022 11:34 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4ஆவது தோல்வியை தழுவின.

மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. சிஎஸ்கே தொடர்ந்து 4ஆவது தோல்வியை தழுவியது.

புனேயில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 37 பந்தில் 68 ரன் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ரோகித்சர்மா 15 பந்தில் 26 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஹசரங்கா, ஹர்‌ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அனுஜ் ராவத் 47 பந்தில் 66 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 36 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 4ஆவது தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்காக கேப்டன் ரோஹித் சர்மா தன்னை தானே குற்றம் சாட்டிக்கொண்டார். 

இதுகுறித்து பேசிய அவர், “எங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்து எடுத்தோம். நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். ஆனால் தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால் தவறான மோதலில் நான் அவுட் ஆனது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.

இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாக தெரியும். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதால்தான் இந்த ரன் வந்தது 151 ரன்னை வைத்து பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை