கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கடுத்து அதிரடியான மாற்றங்களில் இறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற மூத்த பேட்ஸ்மேன்களை இந்திய டி20 கிரிக்கெட் வெளியில் வைத்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தது.

Advertisement

இதற்கு அடுத்து தொடர்ச்சியாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சமீபம் வரை திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் என இளம் வீரர்கள் தொடர்ச்சியாக அணிக்குள் உள்வாங்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதற்கு முன்பே விராட் கோலியின் இடத்திற்கு ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவரதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் சூர்யகுமார் யாதவ் மேலே சென்று, நான்காவது இடத்திற்கு வந்த திலக் வர்மா கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் துவக்க இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து வந்தார்கள். தற்சமயம் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்கி ஜெய்ஸ்வாலுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர் ஒரே ஆட்டத்தில் மட்டும் விளையாடி இருக்கின்ற காரணத்தினால், அந்த இடத்தின் உறுதி பற்றி கூற முடியவில்லை. இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கான இடம் இந்திய டி20 கிரிக்கெட்டில் இனி கிடையாது என்பதாக பேச்சு இருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் குறிப்பாக விராட் கோலிக்கு ஏன் டி20 கிரிக்கெட்டில் இடம் இல்லை என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர் “கடந்த ஆண்டும் நாங்கள் இதையே செய்தோம். எங்களுக்கு அப்பொழுது டி20 உலகக் கோப்பை இருந்தது. எனவே நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடவில்லை. இப்போதும் நாங்கள் அதையே செய்கிறோம். இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இருக்கிறது எனவே நாங்கள் டி20 போட்டிகள் விளையாடுவது இல்லை.

எல்லா வடிவத்திலும் விளையாடி உலகக் கோப்பைக்கு தயாராக முடியாது. எனவே இப்படி ஒரு முடிவை நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தோம். ரவீந்திர ஜடேஜாவுக்கும் இதேதான் நடந்து வருகிறது. அவரும் சமீபத்தில் டி20 கிரிக்கெட் விளையாட வில்லை. ஆனால் நீங்கள் யாரும் அது குறித்து கேட்பதில்லை. நீங்கள் என்னையும் விராட் கோலியையும் வைத்து கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஜடேஜாவும் விளையாடவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News