SA vs IND: பயிற்சியின் போது ரோஹித் காயம்!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வலியால் துடித்த அவர் பயிற்சியை பாதியில் விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் வேண்டுமானால் ஒரு வாரம் ஓய்வில் இருக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரோஹித் சர்மா, தென் ஆப்பிரிக்க தொடரில் இல்லை என்றால் அது பெரும் பின்னடைவாக கருதப்படும்.ஒரு வேலை ரோஹித்துக்கு முதல் டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டால் மாயங் அகர்வால் தொடக்க வீரராக வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது.
இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஜோடி தென் ஆப்பிரிக்கா தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்குகிறது. தென் ஆப்பிரிக்க மண்ணில் ரோஹித்தின். சராசரி 15 ரன்கள் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை மாற்றும் உத்வேகத்துடன் அவர் களமிறங்குகிறார். கே.எல்.ராகுலின் சராசரி வெறும் 7 ரன்களே ஆகும். இந்த புள்ளி விவரத்தை மாற்றும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களின் பங்கு மிகவும் முக்கியம். அவர்கள் புது பந்தை எந்த அளவிற்கு தாக்குப் பிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும். இதனால் எப்போதும் அணியில் கூடுதலாக ஒரு மாற்று தொடக்க வீரர் இருப்பார். வெளிநாட்டு தொடர்கள் என்றால் குறைந்தது இருவர் இருப்பார்கள். மாயங் அகர்வால் ஏற்கனவே அணியில் இருக்க தென் ஆப்பிரிக்கா ஏ தொடரில் கலக்கிய அபிமன்யூ ஈஸ்வரனை இந்திய அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.