உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!

Updated: Thu, Oct 19 2023 20:10 IST
உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறிப்பாக அந்த அணிக்கு 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓப்பனிங் ஜோடியில் லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்ஸித் ஹசன் 51 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதன் பின் வந்த நஜ்மல் சான்டோ 8, மெஹதி ஹசன் 3, ஹிரிடாய் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனாலும் லோயர் மிடில் ஆர்டரில் ரஹீம் 38, முஹ்முதுல்லா 46 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 

அதைத்தொடர்ந்து 257 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஷாகிப் ஆல் ஹசன் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஷாகிப் அல் ஹசன் 743 ரன்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 754 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அது போக இப்போ போட்டியில் 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இதுவரை உலக கோப்பையில் 21 போட்டிகளில் 1,243 ரன்களை 102.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கோப்பையில் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸின் சாதனை தகர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இது போக இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸரையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற ஈயான் மோர்கன் சாதனையை தகர்த்துள்ள அவர் மற்றுமொரு உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஈயான் மோர்கன் 60 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது 61 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை