கடைசி இரண்டு போட்டிகளில் ரோஹித் விளையாடுவது உறுதி - தகவல்!

Updated: Thu, Aug 04 2022 15:19 IST
Image Source: Google

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி 2 போட்டிகள் வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகள் நடக்கின்றன.

இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 44 பந்தில் 64 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ரோஹித் சர்மா, 2ஆவது போட்டியில் பெரிதாக ஆடவில்லை.

3ஆவது டி20 போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது 5 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் விளாசிய நிலையில், காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

ரோஹித் சர்மா காயத்தால் பாதியில் களத்திலிருந்து வெளியேறியது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசத்தால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் கவலையளித்தது.

ஆனால் 3ஆவது டி20 போட்டி கடந்த 2ஆம் தேதி நடந்த நிலையில், 4ஆவது டி20 போட்டி 6ஆம் தேதி தான் நடக்கிறது. இடையில் 4 நாட்கள் இடைவெளி இருந்ததால் ரோஹித் சர்மா அதற்கிடையே ஃபிட்னெஸை அடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே கடைசி 2 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என முக்கியமான தொடர்கள் வரிசையாக இருப்பதால் ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸுடன் இருப்பது இந்திய அணிக்கு முக்கியம். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை என்பதால் அவரது ஃபிட்னெஸ் மிக முக்கியம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை