ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்! 

Updated: Mon, Sep 11 2023 15:52 IST
ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!  (Image Source: Google)

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியை போன்று தடுமாறாமல் ஷாகின் அப்ரிடியின் பந்துகளை அசால்டாக பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசமும் அடித்தார்.

முதல் 26 பந்துகளை பொறுமையாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ஷாதப் கான் வீசிய அவரது முதல் ஓவரிலேயே 19 ரன்கள் குவித்ததோடு 42 பந்துகளில் அரைசதமும் அடித்தார். அரைசதம் அடித்தபின்பும் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா மொத்தம் 49 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த போது, ஷாதப் கானின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்த அடுத்த சில பந்துகளில் 58 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் பின் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போது மழை குறுக்கிட்டு நீண்ட நேரத்தை வீணடித்ததால் போட்டி முடித்து கொள்ளப்பட்டது. இதனால் ரிசர்வ் டேவாக போட்டி இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான கவுதம் கௌதம் ரோஹித் சர்மா விக்கெட் இழந்த விதத்தை விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,“ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லும் மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணி இலகுவாக 370 ரன்களை எடுத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா மிக மோசமான ஷாட் அடித்து விக்கெட்டை இழந்து அனைத்தையும் மாற்றிவிட்டார். தான் அடித்த ஷாட் மிக மிக மோசமானது என்பதை ரோஹித் சர்மாவும் ஒப்புக்கொள்வார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை