ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Sep 23 2021 17:23 IST
Image Source: Google

கரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ஷர்ஜா கிரிக்கெட் மைதானம், ஷர்ஜா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறது.

அதிலும் மும்பை அணிக்கெதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக அதே உற்சாகத்துடன் நாளைய போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பந்துவீச்சில் பிராவோ, சஹார் அணிக்கு கூடுதல் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, கேகேஆர் அணியுடனான தொடக்க போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிது அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. 

இதனால் நாளைய போட்டியில் அவர்கள் நிச்சயம் தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் ஹர்சல் படேல், கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹால் அணிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

நேருக்கு நேர்

  • மோத்த ஆட்டங்கள் - 27
  • சிஎஸ்கே வெற்றி -17
  • ஆர்சிபி வெற்றி -9
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி (கே), தேவதத் படிக்கல், ஸ்ரீகர் பாரத்/ முகமது அசாருதீன் (wk), கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் ஜேமீசன்/ டிம் டேவிட், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு/ ராபின் உத்தப்பா, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஏபி டிவில்லியர்ஸ்
  • மட்டையாளர்கள் - விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல் -ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்கா, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை