ரியான் பராக்கை மேம்படுத்த காத்திருக்கிறோம் - குமார் சங்கக்காரா!

Updated: Tue, May 31 2022 17:12 IST
RR coach Kumar Sangakkara backs Riyan Parag to come good in IPL 2023 (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வெற்றிகரமாக நேற்று முந்தினம் நிறைவடைந்தது. இத்தொடரில் இறுதிப்போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ரஜாஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி, ஐபிஎல் கோப்பையை வென்று சாதித்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. இவர் பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர். கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வருகிறார். 

இது குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரை அளித்த பிறகும் ரியான் பராக் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.  

இந்த நிலையில் ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து  பேசிய குமார் சங்கக்காரா, "பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்கள் அணியினரின் பேட்டிங்கை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஆரம்ப கட்டத்தில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரின் பெரும் பங்களிப்பை நாங்கள் பெற்றுள்ளோம். 

ரியான் பராக் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் நன்றாக விளையாடினர். ஆனால் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில், சப்போர்ட் ரோல் பிளேயர்களிடமிருந்தும் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டத்திறன் தேவை என்று நான் நினைக்கிறேன்.

ரியான் பராக், அவருக்கு பெரிய அளவிலான திறன் கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அடுத்த சீசனில் நாங்கள் வரும் நேரத்தில் அவரை அதிக பேட்டிங் எண்ணிக்கைக்கு கொண்டு வர வேண்டும். வெறும் டெத் ஹிட்டரை விட ஆரம்ப மிடில் ஆர்டர் வீரராக அவரை மாற்றுவதற்கு எதிர்நோக்குகிறேன். ஏனென்றால், அவர் சுழல் மற்றும் வேகப் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை