ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!

Updated: Mon, Apr 28 2025 12:18 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், ராஜச்தான் ராயல்ஸ் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகள் 2 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்தில் இருப்பதுடன், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது. அந்த அணி கடந்த சில போட்டிகளாகவே வெற்றி இலக்கை எட்டிய நிலையிலும் இறுதிக்கட்டத்தில் அவர்களால் சரிவர செயல்பட முடியாததன் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதீஷ் ரானா, ரியான் பராக் போன்ற வீரர்கள் இருப்பினும் அவர்கள் நிலைத்து நிற்காமல் இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன்களைக் கட்டுபடுத்தும் நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சஞ்சு சாம்சனும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாதது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

குஜராத் டைட்டன்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். அவர்களுடன், ஷாரூக் கான், ராகுல் திவேத்தியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு மிக்கப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறனர். அவர்களுடன் இஷாந்த் சர்மா, அர்ஷத் கான் உள்ளிட்டோரும் சோபிக்கும் பட்சத்தில் எதிரணி பேட்டர்களுக்கு அது நிச்சயம் தலைவலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

நேருக்கு நேர்

  • மோதியபோட்டிகள் - 07
  • குஜராத் டைட்டன்ஸ் – 06
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 01

Also Read: LIVE Cricket Score

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), துருவ் ஜூரெல்
  • பேட்ஸ்மேன்கள் - சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை