ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Apr 05 2023 10:22 IST
RR vs PBKS IPL 2023 Match 8 Dream11 Team: Jos Buttler or Shikhar Dhawan; Check Fantasy Team, C-VC Op (Image Source: CricketnMore)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இவ்விரு அணிகளும் மோதும் இப்போட்டியானது கௌகாத்தியிலுள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌஹாத்தி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஊதித்தள்ளியது. அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பேரும் வரிசையாக அரைசதம் அடித்ததுடன், அணியையும் 200-ஐ கடக்க வைத்து அமர்க்களப்படுத்தினர். பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் மிரட்டிய ராஜஸ்தான், ஹைதராபாத்தை 131 ரன்னில் சுருட்டியது.

முதல் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தியதும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை சாய்த்ததும் வெற்றியை சுலபமாக்கின. இவர்களை தவிர அஸ்வின், ஜேசன் ஹோல்டர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோரும் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

அதேசமயம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு இடையே 7 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் கேப்டன் தவான் (40 ரன்), பானுகா ராஜபக்சே (50 ரன்) கணிசமான ரன் எடுத்தனர். சாம் கரன், சிகந்தர் ராசா, ஷாருக்கான் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் பஞ்சாப்பின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகின்றன. 

இவர்களுடன் சேர்ந்து பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், நாதன் எலிஸ், ராகுல் சாஹர் நம்பிக்கை அளிக்கிறார்கள். இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 14
  • பஞ்சாப் கிங்ஸ் - 10

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான் (கே), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பானுகா ராஜபக்சே
  • பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஷ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

கேப்டன்/துணைக்கேப்டன் - ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், சாம் கரன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை