நாங்கள் 100 சதவீதம் நல்ல உடல்நிலையுடன் இல்லை - சஞ்சு சாம்சன்!

Updated: Thu, May 23 2024 13:18 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்க்ளைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34 ரன்களையும், விராட் கோலி 33 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இருப்பினும் ஒருகட்டத்தில் அந்த அணி அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரியான் பராக் 36 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “கிரிக்கெட்டும் வாழ்க்கையும் நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நமக்கு சில நல்ல மற்றும் சில மோசமான கட்டங்கள் இருக்கும். ஆனால் நாம் அதிலிருந்து  கம்பேக் கொடுப்பதற்கான மன உறுதியை கொண்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

எங்கள் அணியின் பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் எப்போதும் எதிரணி பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்து ஃபீல்ட் செட் செய்கிறார்கள். அதேபோல் பயிற்சியாளர் சங்கக்காரா மற்றும் ஷேன் பாண்ட் இருவருக்கும் எங்களது வெற்றியில் பங்குண்டு. ஏனென்றால் அவர்கள் ஏராளமான திட்டங்களுடன் வருகிறார்கள். அதேபோல் அஸ்வின் மற்றும் போல்ட் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். ராஜஸ்தான் அணியில் அனுபவமும், இளமையும் கலந்து வீரர்கள் இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால், ஜுரெல் மற்றும் ரியன் பராக் மூவரும் 22 வயதில் இருப்பவர்கள். அவர்களுக்கு கிடைத்த சிறிய அனுபவத்தை கொண்டு இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது நிச்சயம் அற்புதமானது. அதேபோல் நான் இன்றைய போட்டியில் 100 சதவிகிதம் நல்ல உடல்நிலையுடன் இல்லை. ஓய்வறையில் உள்ள வீரர்களுக்கும், உடல்நலப் பிரச்சனைகள் உள்ளது. மேலும் நிறைய வீரர்களுக்கு இருமலால் உள்ளிட்ட பிரச்சனகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் ரோவ்மன் பாவெல் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதுடன் ஆட்டத்தையும் முடித்து கொடுத்துள்ளார். நாளை மீண்டும் பயணம் செய்து, ஒருநாள் பயிற்சிக்கு பின் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட வேண்டும். அதனால் அப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை