இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹார். தற்போது 31 வயதாகும் சஹால், இந்திய அணிக்காக 2016 முதல் 59 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2014 முதல் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 138 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு சஹால் அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஏலத்தில் எனக்கு ரூ. 15 கோடி கிடைக்க வேண்டும் எனக் கூறமாட்டேன். ரூ. 8 கோடியே எனக்குப் போதுமானது. 

Advertisement

விராட் கோலி எனக்கு மூத்தவர். ஆர்சிபியில் நான் இருந்த 8 வருடங்களும் எங்களிடையே அருமையான சகோதரப் பாசம் நிலவியது. மைதானத்தில் மட்டுமல்ல அதன் வெளியேயும் அவரிடம் என்னால் என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும். அந்த நட்பினால் அவருடைய தலைமையின் கீழ் என்னால் சிறப்பாகப் பந்து வீச முடிந்தது.

ஆர்சிபி அணியில் விளையாடிய கடந்த 8 வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தமுறை என்னை எந்த அணி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஒரு தொழில்முறை வீரராக எந்த அணியிலும் விளையாட நான் தயாராக இருக்க வேண்டும். 

ஆர்சிபி அணிக்கு மீண்டும் செல்ல விருப்பப்படுகிறேன். ஆனால் வேறொரு அணி என்னைத் தேர்வு செய்தால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஆர்சிபி அணியில் நன்கு விளையாடியதால் தான் இந்திய அணிக்கு நான் தேர்வானேன். என் திறமையை நிரூபிக்க அந்த அணி எனக்கு உதவியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News