இந்தியாவை எதிர்கொள்வது எளிமையானது அல்ல - ரியான் பர்ல்!

Updated: Sun, Aug 14 2022 15:28 IST
Image Source: Google

ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரில் மோதுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஹராரே புறப்பட்டுச் சென்றது. இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறுகிறது. வரும் 18ஆம் தேதி முதல் ஒருநாள், 20, 22 -இல் இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்திய அணிக்கு முதலில் தொடக்க வீரர் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இதற்கிடையே இளம் வீரா் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்ட நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த மே மாதம் ஐபிஎல் தொடரில் காயமடைந்திருந்த ராகுல் அதன்பின் போட்டிகள் எதிலும் ராகுல் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். அப்போதும் காயம் காரணமாக அவா் ஆடவில்லை. இதற்கிடையே தற்போது முழுமையாக ராகுல் குணமடைந்து விட்டதால், மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதே போல் காயத்தில் இருந்து மீண்ட தீபக் சஹாா் இடம் பெற்றுள்ளாா். இளம் வீரா் ராகுல் திரிபாதி ஒருநாள் அணியில் அறிமுகம் ஆகிறாா். வலது கை வீரா் காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்பின்னா் குல்தீப் யாதவும் சோ்க்கப்பட்டுள்ளாா். வரும் அக்டோபா், நவம்பரில் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு வீரா்களின் திறன்களை பிசிசிஐ சோதித்து பாா்த்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது என ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல நாங்கள் முயற்சி செய்வோம். ஆனால் அதனை எப்படி செய்யப்போகிறோம் என்பதை நாங்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை. மேலும் இந்தியா உலககின் சிறந்த அணிகளில் ஒன்றாகும். அவர்கள் எளிதாக எங்களுடன் விளையாடப்போவதில்லை. அவர்களுடன் விளையாடுவது மிகமது கடினமாக இருக்கு. ஆனாலும் நாங்கள் எங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால், அவர்களை எப்படியோனும் வீழ்த்தி வெற்றிபெற முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை