Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Sikandar raza

BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
Image Source: Google

BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

By Bharathi Kannan April 24, 2024 • 16:06 PM View: 50

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன. 

அந்தவகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயாயான இந்த தொடரானது அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன.

Related Cricket News on Sikandar raza