SAA vs INDA: மாலன், ஸோர்ஸி அபாரம்; வலுவான நிலையில் தெ.ஆ!
இந்திய ஏ அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு ஏ அணி உடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய சீனியர்கள் கிரிக்கெட் அணியினர் விரைவில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அதற்கு முன்னதாக தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏ அணிகள் 3 போட்டிகள் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர்.
அதன்படி நேற்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்க்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்கா சார்பில் களம் இறங்கிய கேப்டன் மாலன் 258 பந்துகளுக்கு 157 ரன்களும், ஸோர்ஸி 186 ரன்களுக்கு 117 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி, அர்சன் நாக்வாஸ்வாலா மற்றும் உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர்களான ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் பாபா அபராஜித் ஆகியோர் விக்கெட் எடுக்கத் தவறி உள்ளனர்.
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 343 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பீட்டர் மாலன் 157 ரன்களுடனும், ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.