Advertisement
Advertisement
Advertisement

Tony de zorzi

WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 357 ரன்களில் ஆல் அவுட; விண்டீஸ் அணி தடுமாற்றம்!
Image Source: Google
Advertisement

WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்கா 357 ரன்களில் ஆல் அவுட; விண்டீஸ் அணி தடுமாற்றம்!

By Bharathi Kannan August 09, 2024 • 22:27 PM View: 102

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது  ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டமானது கைவிடப்பட்டது. 

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை முழுமையாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களையும் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களையும் சேர்த்த நிலையில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்ப்னர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டா நாள் ஆட்டநேர முடிவில் 8 விகெட் இழப்பிற்கு 344 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை வியான் முல்டர் 37 ரன்களுடனும், காகிசோ ரபாடா 12 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். 

Advertisement

Related Cricket News on Tony de zorzi