பாக்ஸிங் டே டெஸ்ட்: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; இந்தியா அசத்தல்!

Updated: Tue, Dec 28 2021 19:07 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல் ராகுலின் அபாரமான சதத்தினால் 327 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

இதில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர், பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம், பெட்டர்சென் இருவரும் முகமது ஷமியின் ஓவாரில் விக்கெட்டை இழந்தனர். 

அடுத்து களமிறங்கிய வெண்டர் டுசென் 3 ரன்னிலும், குயின்டன் டி காக் 34 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. 

அந்த அணியில் டெம்பா பவுமா 31 ரன்களுடனும், முல்டர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை