தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துருவ் ஜூரெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 132 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவற, இந்திய ஏ அணி 255 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டியான் வான் வூரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கேப்டன் அக்கர்மேன் சதமடித்ததுடன் 134 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களை மட்டுமேசேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்னா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 34 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றியும், சாய் சுதர்சன் 23 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து இன்று நடைபெற்ற கேஎல் ராகுல் 26 ரன்னிலும், குல்தீப் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ராகுல் 27 ரன்னிலும், குல்தீப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷ்ப் பந்த்தும் 65 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெல் - ஹர்ஷ் தூபே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் துருவ் ஜூரெல் அபாரமாக விளையாடி இந்த இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஹர்ஷ் தூபே 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 84 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 127 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் செலே  3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

Also Read: LIVE Cricket Score
Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு ஜோர்டன் ஹெர்மான் - செனோக்வனே இணை தொடக்கம் கொடுத்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 397 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News