ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இறுதிப்போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Tue, Jun 10 2025 14:03 IST
Image Source: Cricketnmore

South Africa vs Australia Dream11 Prediction, WTC 2025 Final: டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுழற்சிக்கான இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

SA vs AUS WTC 2025 Final Match Details

மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
நேரம்- ஜூன் 11, மாலை 03 மணி (இந்திய நேரப்படி)

Lord's Cricket Ground, London Pitch Report

2023-25 ​​ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 147 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன நிலையில், 53 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 43 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 310 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸின் சராசரி 157 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 729 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SA vs AUS Test Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 101
  • ஆஸ்திரேலியா- 54
  • தென் ஆப்பிரிக்கா - 26
  • முடிவில்லை- 21

SA vs AUS Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி, ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம், டெம்பா பவுமா
  • ஆல்-ரவுண்டர் - மார்கோ ஜான்சன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா.

SA vs AUS Predicted Playing 11

South Africa Probable XI : ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), கைல் வெர்ரேய்ன், கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

Australia Probable XI : உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.

SA vs AUS Dream11 Prediction, SA vs AUS Test, WTC 2025 Final, SA vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, South Africa vs Australia

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::