பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்த பவுமா - டுசென் இணை!

Updated: Wed, Jan 19 2022 19:40 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மதியம் போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், டெம்பாபவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 279 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வெண்டர் டுசென் 115 ரன்களையும், டெம்பா பவுமா 110 ரன்களையும் சேர்த்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா மற்றும் வேண்டர்டுசைன் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.

அதன்படி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் 4ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனை பட்டியலில் தற்போது இவர்கள் இருவரும் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர். முதல் இடத்தில் சோயிப் மாலிக் மற்றும் யூசப் பதான் ஆகியோரது ஜோடி 2009ஆம் ஆண்டு 206 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 204 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் இந்த இணை 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக கடந்த 2000 ஆம் ஆவது ஆண்டு கிப்ஸ் மற்றும் கேரி க்ரிஸ்டன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2 ஆவது இடத்தில் தற்போது பவுமா மற்றும் வேண்டர் டுசென் ஜோடி 204 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை