SA vs IND, 3rd Test: மீண்டும் சொதப்பிய ரஹானே, புஜாரா; ரிஷப் பந்த் அதிரடி!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களையும் சேர்த்தது.
இதையடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அதன்படி விராட் கோலி 14 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் புஜாரா மேற்கொண்டு ரான் ஏதும் எடுக்காமலும், அடுத்து வந்த ரஹானே ஒரு ரன்னுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் கேப்டன் கோலி நிதான அட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 51 ரன்களுடனும், விராட் கோலி 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.