SA vs IND: கேப்டவுன் சதத்தின் மூலம் சாதனைகளைக் குவித்த ரிஷப் பந்த்!

Updated: Thu, Jan 13 2022 22:15 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 223 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் அடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின் 13 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, ரிஷப் பந்தின் பொறுப்பான சதத்தால் (100*) 198 ரன்கள் அடித்த இந்திய அணி, 211 ரன்கள் முன்னிலை பெற்று, 212 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி அந்த இலக்கை விரட்டிவருகிறது.

இந்த போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அடித்த சதத்தின் மூலம் ரிஷப் பந்த் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த சதத்தின் மூலம் ரிஷப் பந்த் படைத்த சாதனைகள்:

  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளிலும் சதமடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.
  • தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.
  • SENA என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக சதமடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் (3 சதங்கள்) படைத்துள்ளார். 
  • தென் ஆப்பிரிக்காவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.

இப்படியாக, குமார் சங்கக்கரா, தோனி போன்ற ஜாம்பவான் வீரர்கள் கூட செய்யாத சாதனையை ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக செய்துள்ளார் ரிஷப் பந்த் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை