SA vs PAK 3rd ODI: தொடரை வெல்வது யார்? தென்ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்

Updated: Tue, Apr 06 2021 16:13 IST
Image Source: Google

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனிலையில் வைத்துள்ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சுரியனில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில்  வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

தென்ஆப்பிரிக்கா அணி 

டெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியின் குயின்டன் டி காக், ஹெண்ட்ரிச் கிளாசன், மார்க்ரம், டேவிட் மில்லர், வேண்டர் டௌசன் என அதிரடி வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளதால், நாளைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. 

ஆனால் குயின்டன் டி காக், டேவிட் மில்லர், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, அண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பியுள்ளதால், இனிவரும் போட்டிகளில் அவர்களால் தென்ஆப்பிரிக்க அணியில் விளையாடமுடியாது. 

இதனால் நாளைய போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிரடி வீரர்கள் இல்லாமல் தென்ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானை சமாளிக்குமா என்ற சந்தேசகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது. அதிலும் ஃபகர் ஸமானின் அதிரடியான 193 ரன்கள் அந்த அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. 

அதேபோல் அணியில் மீதமுள்ள வீரர்களும் தங்களது பணியை சரியாக செய்யும் பட்சத்தில் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூஃப், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ஹொசைன் ஆகியோருன் சிறப்பாக செயல்படுவதால் நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

அணி விவரம்

தென்ஆப்பிரிக்கா: ஜே.மாலன், ஐடன் மார்க்ரம், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான்டெர் டௌசன், ஹென்ரிச் கிளாசென், வியன் முல்டர், பெஹ்லுக்வாயோ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜூனியர் தலா, சிபாம்லா, தப்ரைஸ் ஷம்சி.

பாகிஸ்தான்: ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், டேனிஷ் அஜீஸ், ஆசிப் அலி, உஸ்மான் காதிர், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ஹொசைன், ஹரிஸ் ரவூப்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை