இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 9 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 4 ரன்னிலும் என விக்கெட்டி இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ரன்களூக்கும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடுவில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 80 ரன்களைச் சேர்த்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெம்பா பவுமா 28 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 9 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் கைல் வெர்ரையன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதற்கிடியில் டெம்பா பாவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 70 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை  அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அரம்பமே அதிர்ச்சி காத்திருந்த்து. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கேப்டன் தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப் ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 13 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய குசால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 42 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் 6.5 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டோனி டி ஸோர்ஸி 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டரும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டெம்பா பவுமா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டெம்பா பவுமா 24 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 281 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News