SA vs WI, 1st test: மார்க்ரம் அபார சதம்; கடைசி நேரத்தில் சரிந்த தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Feb 28 2023 21:47 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டீன் எல்கர் - ஐடன் மார்க்ரம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் சேர்த்தனர். 

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்ப்ட்ட டீன் எல்கர் 71 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஐடன் மார்க்ரம் சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிற்ங்கிய ஸோர்ஸி 28 ரன்களிலும், கேப்டன் டம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, 18 பவுண்டரிகளுடன் 115 ரன்களை சேர்த்து நங்கூரமாக நின்றிருந்த மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சென், ஹென்ரிச் கிளாசென், சினுராம் முத்துசாமி, காகிசோ ரபாடா என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது.

இதில் மார்கோ ஜான்சென் 17 ரன்களுடனும், ஜெரால்ட் கோட்ஸி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும, கீமார் ரோச், கைல் மேயர்ஸ், கேப்ரியல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை