SA vs WI,2nd ODI: சதம் விளாசிய ஷாய் ஹோப்; ரன் குவிப்பில் வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Sat, Mar 18 2023 20:29 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈஸ்ட் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தள் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிராண்டன் கிங் 30 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் நங்கூரம் போல் நின்ற ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய அவர் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 5 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 128 ரன்களை குவித்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை