எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி!

Updated: Tue, Jan 30 2024 11:38 IST
எஸ்ஏ20 2024: டு பிளெசிஸ் அரைசதம்; கேப்டவுனை வீழ்த்தி ஜோபர்க் அபார வெற்றி! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதன்பின் வாண்டெர் டுசென் 16 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின் நீண்ட நேரம் மழை நீடித்த காரணத்தால் இப்போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து விளையாடிய ரிக்கெல்டன் 23 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 3 ரன்களுக்கும் என என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடிய 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 33 ரன்களை விளாசினார். இதன்மூலம் 8 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 80 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - லுயிஸ் டு ப்ளூய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் 20 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களையும், டு ப்ளூய் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 41 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை