தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வெண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 6 ரன்களிலும், சாம் கரண் 3 ரன்களுக்கும், டெவால்ட் ப்ரீவிஸ் 9 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் டுசெனுடன் இணைந்த கேப்டன் கீரென் பொல்லார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வெண்டர் டுசென் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 60 ரன்களில் ரஸ்ஸி வேண்டர் டுசெனும், கீரென் பொல்லார்ட் 33 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.

இதனால் 20 ஓவர்கள் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கேப்டன் வெய்ன் பார்னெல் 4 விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னிலும், பிலிப் சால்ட் 7 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 10 ரன்களிலும், கைல் வெர்ரைன் 34 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 17 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டி பிருய்ன் - செனுரான் முத்துசாமி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி பிருய்ன் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முத்துசாமி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 38 ரன்களையும், வெய்ன் பார்னெல் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்திக் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மும்பை இந்திய அணி இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News