டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Jan 11 2025 12:46 IST
Image Source: Google

தென் ஆப்பிரிகாவின் ஃபிரான்ஸை லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் எஸ்ஏ20 லீக் தொடரில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 39 வயதான தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தால், எஸ்ஏ20 லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இது தவிர, இந்தப் போட்டியில் கார்த்திக் ஒரு சிறப்பான சாதனையைப் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். 

அந்தவகையில் தினேஷ் கார்த்திக் இப்போட்டியில் 26 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, தினேஷ் கார்த்திக் இதுவரை 401 போட்டிகளில் விளையாடிய 7407 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயம் எம் எஸ்தோனி 391 போட்டிகளில் 7432 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் டி20 போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானர். இதுதவிர்த்து இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்ற நிலையில் அந்த அணீயின் ஒரு அங்கமாகவும் தினேஷ் கார்த்திக் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இந்திய அணிக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1025 ரன்களையும், 94 ஒருநாள் போட்டிகளில் 1752 ரன்களையும், 60 டி20 போட்டிகளில் 686 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்களுடன் 4842 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை