எஸ்ஏ20 2025: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய போல்ட் - வைரலாகும் காணொளி!

Updated: Fri, Jan 10 2025 11:23 IST
Image Source: Google

எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடியதுடன் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 56 ரன்களில் பிரீவிஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 23 ரன்களையும், டெலானோ போட்ஜிட்டர் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.

இதனையடுத்து இலக்கை நோகி விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க 16 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களுக்கும், மார்கோ ஜான்சன் 14 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இதனால் அந்த அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் தரப்பில் டெலானோ போட்ஜிட்டர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டெலானோ போட்ஜிட்டர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தனது ஒரே ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீச்சிய போல்ட், ஓவரின் 5ஆவது பந்தில் ஸாக் கிரௌலியையும், 6ஆவது பந்தில் ஜோரடன் ஹெர்மனது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை