SA20 League: பார்ல் ராயல்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வெய்ன் பார்னெல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் வில் ஜேக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தியூனிஸ் டி ப்ரூயின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குசால் மெண்டீஸ் 26 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலி ரூஸோவ் 19, டேட்ஸ்வெல் 2 என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த டி ப்ருயின் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 47 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்திருந்த அவர், ஆடம்ஸ் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து பவுண்டரி லைனிலிருந்து லூபிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஜிம்மி நீஷம் ஒருசில பவுண்டரிகளை அடித்து 21 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் ஆடம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.