ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் தேர்வை குறை கூறிய சபா கரீம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் அதிரடியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தேர்வை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் குறை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ராஜஸ்தான் ராயல்ஸ் சில வித்தியாசமான அணி தேர்வுகளையும் செய்துள்ளனர். அவர்கள் ஏன் ஐந்தாவது பந்துவீச்சாளர்களாக ராகுல் திவேட்டியா மற்றும் மஹிபால் லோமரரை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இருவரும் உங்கள் ஆறாவது பந்துவீச்சாளராக மட்டுமே செயல்பட முடியும். நான்கு தரமான சீமர்களுடன் மட்டுமே விளையாடும் அவர்கள், ஏன் இவர்களை அணியில் சேர்த்துள்ளனர் என்பது புரியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.