இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய சச்சின்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றது.
மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பை போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து கோப்பையை வெல்லும் முயற்சியில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சச்சினின் ட்விட்டர் பதிவில்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ள நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அதேசமயம் இந்திய அணியை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.
ஏனெனில் இப்போட்டியின் ரீசர்வ் டே ஆட்டத்தின் முதல் பத்து ஓவர்கள் தான் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. அதிலும் விராட் கோலி, புஜாரா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகள இழந்ததன் காரணமாகவே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், அணியின் தோல்விக்கும் வழிகுத்துள்ளது” என்று தெரிவித்தார்.