தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதாக சச்சின் டெண்டுல்கர் காவல்துறையில் புகார்!

Updated: Sat, May 13 2023 18:55 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், தனது பெயர்,புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு இணையதளத்தில் போலீயான விளம்பரம் மூலமாக எடை குறைக்கும் மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டன. அதோடு, சச்சின் கையெழுத்திட்ட டி சர்ட் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “உடல் எடையை குறைக்கும் மருந்துகள் சச்சின் பெயரை பயன்படுத்தி விளம்பரப்படுத்தப்பட்டது. அதனுடைய விலை ரூ.899 என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். சச்சின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்யப்பட்ட இணையதம் மற்றும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை