சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!

Updated: Thu, Nov 02 2023 20:18 IST
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்! (Image Source: Google)

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். சுமார் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ள இவர் கடந்த 1989 ஆம்  ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் இன்னிங்ஸை விளையாடினார்.

அதேபோல், கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அதில் முக்கியமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை விளாசியவர்.

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இச்சூழலில், 50ஆவது பிறந்தநாளை கடந்திருக்கும் அவரை பாராட்டும் விதமாக  மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று அவரது ஆள் உயர சிலை திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் பலர் சச்சின் சிலையை பார்த்து குழம்பிப் போனார்கள். ஏனெனில் அது பக்கவாட்டில் இருந்து பார்க்க அப்படியே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் போலவே இருக்கிறது. தொலைக்காட்சி நேரலையில் காட்டப்பட்ட போதும் அந்த சிலையை பார்க்க ஸ்டீவ் ஸ்மித் சிலை போலவே இருந்தது. 

இதையடுத்து சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல்கள் எழுந்தன . பலரும் "சச்சின் முன்னிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஸ்டீவ் ஸ்மித் சிலையை திறந்து வைத்தார்" என் பதிவிட்டு அந்த சிலையை கிண்டல் செய்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை