இதுவே எனது வாழ்வின் மறக்கமுடியா தருணம் - சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனியார் செய்து நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்நாளில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் தருணம் என்றால் அது உலக கோப்பை தொடரை வான்கடே மைதானத்தில் வைத்து வென்றது தான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், “எனது வாழ்நாளில் நான் உலக கோப்பையை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து தொட்டுப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்தக் கனவை நான் எப்பொழுதாவது எப்படியாவது நிறைவேற்றி விடுவேன் என்று எனக்குள் அடிக்கடி நானே சொல்லிக் கொள்வேன். சிறுவயதிலிருந்து அதற்காக எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கனவு எனது கடைசி உலகக் கோப்பை தொடரில் நனவானது தற்போது வரை தன் கண்களுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார். உலக கோப்பை தொடரை வென்ற உடன் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுடன் இணைந்து கொண்டாடியது.
அந்த வெற்றி நாங்கள் மட்டும் பெற்ற வெற்றி அல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் பெற்ற வெற்றி. இந்தியா வெற்றி பெற்றவுடன் யூசுஃப் பதான் மற்றும் விராட் கோலி என்னை தூக்கினார்கள், நான் அவர்களிடம் தயவுசெய்து என்னைக் கீழே போட்டு விடாதீர்கள் என்று நகைச்சுவையாக கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.