அதிரடியில் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் மட்டி 25 ரன்களையும், டாம் ஆம்ப்ரோஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், அபிமன்யூ மிதுன் மற்றும் பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 34 ரன்களையும், குர்கிரத் சிங் 63 ரன்களையும், யுவராஜ் சிங் 27 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 11.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவன் நெகி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பாட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரஸ்னன் விசிய 5ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டர் மற்றும் சிக்ஸரை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட சச்சின் டெண்டுல்கர் தனது அபாரமான ஃபுல் ஷாட் மூலம் ஸ்கொயர் லெக் திசையில் அபாரமானா சிக்ஸரை விளாசி மிரள வைத்தார். அதான்பின் அந்த ஓவரின் அடுத்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி விளாசிய அவர், அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அசத்தி அசத்தினார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.