வங்கதேச தொடரில் இருந்து சலீம் சஃபி விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!

Updated: Mon, Oct 06 2025 20:08 IST
Image Source: Google

வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் வங்கதேச அணி அபாரமாக செயல்பட்டதுடன், 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. 

அந்தவகையில், இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 8ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் 11ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து போட்டிகளும் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடனும், ஆஃப்கானிஸ்தான் அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் விளையாடவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்த நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான ஆஃப்கான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு டி20 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய முகமது சலீம் சஃபிக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிலால் சமி ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தன் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான பிலால் சமி, ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது ஆஃப்கான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, அல்லா கசன்ஃபர், அப்துல்லா அஹ்மத்சாய், பஷீர் அகமது, பிலால் சமி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை